அபுதாபியில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணம் திருட முயற்சி

அபுதாபியில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணம் திருட முயற்சி

அபுதாபி (ஜன-13): ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளனர்.

அபுதாபியின் கயாத்தி இன்டஸ்டிரியல் ஏரியாவில் ஏடிஎம் உடைத்த பணம் திருட முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

முகத்தை மறைத்துக் கொண்டு இரண்டு நபர்கள் ஏடிஎம் மெஷினை உடைப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சுத்தியல் மற்றும் அலுமினியத் துண்டு ஆகியவை அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

திருட முயன்றவர்களை அடையாளம் கண்டு அபுதாபியில் உள்ள முசபா பகுதியில் காவல் துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: