அபுதாபி டோல் கட்டண அபராதம் குறித்து புதிய அறிவிப்பு

அபுதாபி டோல் கட்டண அபராதம் குறித்து புதிய அறிவிப்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் டோல் கட்டணம் அமலுக்கு வருகிறது. கட்டணம் மற்றும் அபராதம் சம்மந்தமான புதிய அறிவிப்பை அபுதாபி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

அபுதாபி உரிமம் பெற்ற வாகனங்களின் கணக்கில் போதுமான தொகை இல்லாமல் இருந்தால் டோல் கேட்களை கடந்து சென்றால் அதற்காக அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்று மூத்த போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அபுதாபியில் போக்குவரத்துத் (தரைவழி) துறையின் செயல் நிர்வாக இயக்குநர் இப்ராஹிம் சர்ஹான் அல் ஹமூதி, போக்குவரத்து துறையினனர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் போது பேசியதாவது. ​​அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவைப் புதுப்பிக்கும் சமயத்தில் செலுத்தப்படாத அனைத்து கட்டணங்களையும் வசூலிக்கப்படும் என்று கூறினார். அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் தானாகவே இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அபுதாபியில் டோல் கட்டண முறை வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக வாகனங்களை பதிவு செய்வதற்கான வலைத்தளம் சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் வாகனங்களை  https://dot.gov.abudhabi அல்லது https://itps.itc.gov.ae/ என்ற இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: