அமீரகத்தில் கொரானா வைரஸ் நோயாளிகள் இருவர் குணமடைந்துள்ளனர்.

அமீரகத்தில் கொரானா வைரஸ் நோயாளிகள் இருவர் குணமடைந்துள்ளனர்.

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட இரண்டு சீன நோயாளிகள் தீவிர சிகிச்சைக்குப் பின்பு தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

அமீரகத்தில் மட்டும் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எட்டு பேர் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 3 நோயாளிகள்  முழுமையாகக் குணமடைந்துள்ளதாகச் சுகாதார மற்றும் நோய்த் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்த முதல் நோயாளி சீனாவைச் சேர்ந்த லியு யுஜியா என்ற 73 வயது பெண் என்று கடந்த வாரம் அமைச்சகம் அறிவித்திருந்தது.

தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ள இருவரும் சீனாவைச் சார்ந்தவர்கள்.  இவர்கள் இருவரும் தந்தையும் மகனும் ஆவார்கள். தந்தைக்கு வயது 41 மகனுக்கு வயது 8 என்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமீரகத்திற்கான சீனத் தூதரகம் சார்பாக லி ஜுஹாங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைத் தலைவர் டாக்டர் பாத்திமா அல் அத்தார் ஆகியோர் குணமடைந்துள்ள தந்தையையும் மகனையும்  நேரடியாகப் பார்வையிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: