அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விருந்தில் துப்பாக்கிச் சூடு.

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விருந்தில் துப்பாக்கிச் சூடு.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஃப்ரெஸ்னோவில் ஒரு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டினை ஒரு குழுவாக இணைந்து நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரின் தென்கிழக்கு பகுதியில் மாலை 6 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஃப்ரெஸ்னோ போலிஸ் லெப்டினன்ட் பில் டூலி தெரிவித்தார். ஒரு வீட்டின் பின்புறத்தில் கால்பந்து விளையாட்டைக் காண்பதற்காக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்து நடந்த இடத்தில் தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று டூலி கூறினார். இச்சம்பவத்தில் குறைந்தது ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மேலும் பலர் ஆபத்தான நிலையிலுள்ளதாக தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் எத்தனை நபர் கொல்லப்பட்டனர் என்ற மூழு விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

மற்றவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை இந்த சம்பவம் சம்மந்தமாக யாரையும் கைது செய்யப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: