அல் பித்தா பூங்காவில் பார்பிகியு பயன்படுத்த கட்டணம்.

அல் பித்தா பூங்காவில் பார்பிகியு பயன்படுத்த கட்டணம்.

தோஹா, ஆகஸ்ட் 29: கத்தார் அல் பித்தா பூங்கா பார்பிகியு செய்வதற்கு வாடகை வசூலிக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தக்கட்டணம் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்பித்தா பூங்காவில் பார்பிக்யூ வசதியைப் பயன்படுத்துவதற்கான கட்டணமாக நான்கு மணி நேரத்திற்கு கத்தார் ரியால் 50 என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை,  காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை, மாலை 4 மணிமுதல்  இரவு 8 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் பூங்கா மூடும் நேரம் வரைக்கான நேரங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான  கட்டணங்களைப் ரொக்கமாகச் செலுத்த அனுமதியில்லை. கார்டுகளில் மூலமாக மட்டுமே பணம் செலுத்த முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்வதற்கும் மேலும் தகவலுக்கும் அல் ருமைலா பகுதிக்கு 44287709 என்ற எண்ணிலும், வாதி அல் சையில் பகுதிக்கு 44287777 என்ற எண்ணிலும் அழைத்து விபரங்களைப் பெறலாம்.

பார்பிகியு முன்பதிவு செய்தவர்கள் அதன் ரசீதைக் கண்டிப்பாகக் கையிலிருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: