இதுதான் காதல்: தன் மனைவி அமர தன் முதுகைத் தந்த கணவன் (காணொளி)

இதுதான் காதல்: தன் மனைவி அமர தன் முதுகைத் தந்த கணவன்

பெய்ஜிங் (டிசம்-07): கர்ப்பம் தரித்த தனது மனைவி உட்கார தன் முதுகைத் தந்த கணவன். இந்த சம்பம் சீனாவில் நடந்துள்ளது. இதன் வீடியோ தற்போது சீன சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடீயோ ஒரு மருத்துவமனை கேமராவில் இருந்து வீடியோவில் பதிவாகி இருந்தது.

தனது கர்ப்பிணி மனைவியுடன் அந்த நபர் ஒரு மருத்துவமனையில் காத்திருந்தார். மனைவி நிற்க முடியாமல்  உட்கார வேண்டும் போல இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த காத்திருக்கும் பகுதியில் இருக்கை ஏதும் காளியாக இல்லை. உடனே அந்த கணவன் தரையில் அமர்ந்தார் அவரது மனைவி அவரது முதுகை மீது அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இதை மற்றவர்கள் பார்த்தாலும் யாரும் அந்த பெண்ணுக்கு உட்கார இடம் தரவில்லை என்பதுதான் வேதனையான விசயமாக இருக்கிறது.

இருந்தும் தன் மனைவிக்காகத் தனது தோளை இருக்கையாகக் கொடுத்த கணவனின் காதல் ஒரு படி மேல்.

இவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் ஊடகங்களின் அறிக்கையின்படி இந்த சம்பவம் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: