இந்த ஆண்டு மட்டும் குவைத்திலிருந்து 5,000 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த ஆண்டு மட்டும் குவைத்திலிருந்து 5,000 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

குவைத்: குவைத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டினரின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேற்றும் மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வரையில் 18,000 வெளிநாட்டவர்களை வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. குடியிருப்பு மற்றும் வேலைச் சட்டத்தை மீறுதல், தொற்று நோய்கள், குற்றவியல் வழக்குகள், போக்குவரத்து மீறல்கள் மற்றும் பிற வழக்குகள் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மொத்தம் 12,000 ஆண்கள் மற்றும் 6,000 பெண்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்கள் பெண்கள் என்று 5,000 இந்தியர்கள் முதல் இடத்திலும், 2,500 பங்களாதேஷியர்கள் இரண்டாம் இடத்திலும், 2,200 எகிப்தியர்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து நேபாளியர்கள் 2,100, எத்தியோப்பியர்கள் 1,700, சிரிய நாட்டினர் 1,400, மற்ற நாடுகளை சார்ந்தவர்கள் அதாவது அரபு, ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்கள் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் 1,200 வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெளியேற்றப்பட்டவர்களில் தொற்று நோய்களைக் கொண்டவர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு “hepatitis” காரணமாக இருந்தது. வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: