உங்கள் ஆப்பில் போனில் இந்த அப்ளிகேஷனை உடனே டெலிட் செஞ்சிடுங்க..

உங்கள் ஆப்பில் போனில் இந்த அப்ளிகேஷனை உடனே டெலிட் செஞ்சிடுங்க..

மொபைல் பாதுகாப்பு நிறுவனமான வான்ட்ரா (Wandera), iOS க்கான 17 அப்ளிக்கேஷன் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன்கள் விளம்பர வருவாயை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன்களை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் சில விளம்பரங்களுக்கு சந்தாதாரர் ஆக்கப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளது.

“கிளிக்கர் ட்ரோஜன் (Clicker Trojan) என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு மால்வேர் பங்ஷன் ஆகும். இது பார்வையாளர்களின் எண்ணிக்கையை செயற்கையாக உயர்த்துவதற்காக அல்லது கிளிக் செய்வதன் அடிப்படையில் வருமானம் ஈட்டுவதற்காக விளம்பர நெட்வொர்க்குகள் அல்லது வலைத்தளங்களுடன் அடிக்கடி இணைப்புகளைச் செய்வதன் மூலம் விளம்பர மோசடி செய்கிறது” என்று வான்ட்ரா கூறுகிறது.

கட்டுப்பாட்டு சேவையகத்திலிருந்து இந்த ஆப்களின் மூலமாக விளம்பரங்களை ஏற்றுவதற்கும், பின்னணியில் வலைத்தளத்தைத் திறப்பதற்கும், பயனர்களின் அனுமதியின்றி விலையுயர்ந்த சந்தா சேவைகளுக்கு பயனர்களை சந்தாவில் இணைப்பதற்கான செட்டிங்குகளை மாற்றுகிறது என்று மேக் (Mac) சமீபத்தில் அறிவித்தது.

இந்த அப்ளிகேஷன்களை இந்தியாவின் குஜராத்தை தளமாகக் கொண்ட ஆப்அஸ்பெக்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (AppAspect Technologies Pvt. Ltd) வெளியிட்டுள்ளது. இந்த 17 ஆப்களை ஐபோன் ஆப் ஸ்டோரில் இருந்து ஏற்கனவே நீக்கியுள்ளது. இந்த ஆப்களை இனிமேல் தரவிறக்கம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் பயனர் உடனடியாக நீக்க வேண்டிய 17 ஆப்கள்

 1. RTO Vehicle Information,
 2. EMI Calculator and Loan Planner,
 3. File Manager – Documents,
 4. Smart GPS Speedometer,
 5. CrickOne – Live Cricket Scores,
 6. Daily Fitness – Yoga Poses,
 7. FM Radio – Internet Radio,
 8. My Train Info – IRCTC and PNR,
 9. Around Me Place Finder,
 10. Easy Contacts Backup Manager,
 11. Ramadan Times 2019,
 12. Restaurant Finder – Find Food,
 13. BMI Calculator – BMR Calc,
 14. Dual Accounts,
 15. Video Editor – Mute Video,
 16. Islamic World – Qibla and
 17. Smart Video Compressor.

உங்கள் ஐபோன்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் ஐபோன்களில் மேலுள்ள அப்ளிக்கேஷன்களை உடனடியாக நீக்கி விடுங்கள்.

About the Author

Leave a Reply

*

%d bloggers like this: