ஒமானில் ஹிக்கா புயல் எச்சரிக்கை.

ஒமானில் ஹிக்கா புயல் எச்சரிக்கை.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தாழ்வான பகுதிகளிலிருப்பவர்கள் உடனடியாக மாறிச் சென்று பத்திரமான பகுதிகளில் இருக்கும் படி ஆர்ஒபி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மீன்பிடிக்க கடலுக்குள் செல்பவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்கவும் அது அறிவுறுத்தியது.

இந்த இக்கட்டான நேரங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

 • காற்றினால் எழிதாக தூக்கி செல்லக்கூடிய பொருட்களை பயன்படுத்தாதீர்கள்
 • தண்ணீர் இல்லாத தொட்டிகளை மாடியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதில் தண்ணீர் நிரப்பி வைக்கவும்.
 • எமர்ஜென்சி விளக்குகள், போட்டரி மற்றும் உடனடியான தகவல்களை தெரிந்துக் கொள்ள வானொலியை தயார் நிலையில் வைத்திருங்கள்.
 • காற்றின் வேகத்தில் ஜன்னல்கள் உடையாமல் இருக்கவேண்டி திறக்காமல் இருக்க டேப்களாளல் ஒட்டிவைக்கவும்.
 • கதவுகள் மற்றும் ஜன்னல்கள் நன்றாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.
 • முதலுதவி பெட்டியை தயாராக வைத்திருங்கள்.
 • வெளியேறேவேண்டி தகவல்கள் கிடைத்தவுடன் கேஸ்சிலிண்டர், நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை அணைக்க வேண்டும்.
 • புயல் வெள்ளத்தில் சிக்குவதைத் தவிற்க புயலின் போது வாக்கிங்க், ஜாக்கிங்க செல்லவேண்டாம்.
 • அவசரகால தங்குமிடங்கள் மற்றும் உதவி வழங்கும் இடங்கள் எங்கிருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • கடலில் நீந்தவோ அல்லது கடலுக்கு அருகில் செல்லவோ வேண்டாம்.
 • தெரு விளக்குகள், மின் கம்பங்கள் மற்றும் தளர்வான கேபிள்கள் அருகே நிற்பதைத் தவிர்க்கவும்.
 • தெளிவான அறிவிப்பும் வரும் வரை வீட்டிலேயே இருங்கள்.
 • நீர் மட்டம் குறைவாக இருந்தாலும் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை கடக்க முயற்சிக்காதீர்கள். திடீரென வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 • தண்ணீர் முழங்கால் மட்டத்திற்கு மேல் இருந்தால் நடப்பதைத் தவிர்க்கவும். உங்கள் வாகனத்தை இயக்க முடியாமல் போனால் உடனடியாக அதை விட்டு விட்டு உயதமான  இடத்திற்குச் செல்லுங்கள்.
 • நீரினால் சூழப்பட்டு மூழ்கிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
 • புயல் அபாயம் அதிகமாக இருப்பதால் இரவில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். எதும் பிரச்சனை என்னும் பட்சத்தில் அவசர எண்ணில் அழைக்கவும்.
About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: