ஒரே விமானத்தில் 75 கர்ப்பிணி பெண்கள் பயணம்.

ஒரே விமானத்தில் 75 கர்ப்பிணி பெண்கள் பயணம்.

துபாய்: இன்று மதியம் 12.45 மணிக்கு துபையிலிருந்து கொச்சிக்கு 185 பயணிகளுடன் கிளம்பிய விமானத்தில் 75 கர்ப்பிணி பெண்களும் பயணம் செய்துள்ளனர். இவர்களுக்கு துணையாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் சென்றுள்ளதாக இந்திய தூதரகம் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு இரண்டாம் கட்டமாக இந்தியாவிற்கு இயக்கப்படும் விமான சேவையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.  இன்று முதல் 23ம் தேதி வரை இந்த சேவை தொடரும். இதில் 11 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் கட்டமாக மே 7 முதல் 14 வரை துபாயிலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை இயக்கப்பட்டிருந்தது. அதில் 11 விமானங்களில் 2079 பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களில் 760 பேர் தொழிலாளர்கள், 438 பேர் சுற்றுலா விசாவில் இருந்தவர்கள் மற்றும் மாணவர்கள், 398 பேர் மருத்துவ உதவி தேவையானவர்கள், 190 பேர் கர்ப்பிணி பெண்கள், 126 பேர் வயதில் முதியவர்கள், 167 பேர் மற்றவர்கள் என்று தூதரக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: