ஓமான் மன்னர் சுல்தான் கபூஸ் காலமானார்

ஓமானின் மன்னர் சுல்தான் கபூஸ் காலமானார்

அரபு உலகில் மிக நீண்ட காலமாக மன்னராக இருந்த சுல்தான் கபூஸ் தனது 79 வயதில் காலமானார் என்று ஓமான் அரசு இன்று (ஜனவரி 11 சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

“மிகுந்த துக்கத்தோடும் ஆழ்ந்த சோகத்தோடும் … வெள்ளிக்கிழமை காலமான சுல்தான் கபூஸ் பின் சையதுக்கு அரசு இரங்கல் தெரிவிக்கிறது” என்று ஒமான் அரசு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1970 முதல் ஓமானை ஆண்ட கபூஸ் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் வெளிப்படையாக வாரிசை அறிவிக்கவில்லை. அடுத்த ஆட்சியாளராக யார் வருவார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை.

ஓமானின் அரசியலமைப்பின் படி அரச குடும்பமானது அரியணை காலியாகி மூன்று நாட்களுக்குள் வாரிசை தீர்மானிக்கும்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: