கடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்.

கடந்த மாதத்தில் மட்டும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த மாதம் மட்டும் 80 சிறப்பு விமானங்கள் மற்றும் ஒன்பது சார்ட்டட் விமான சேவைகளின் மூலமாக 15,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதாக வந்தே பாரத் மிஷன் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் மிஷன் மூலமாக கடந்த மாதம் 7-ம் தேதி முதல் துபாயில் இருந்து 10,000 க்கும் அதிகமான நபர்களும், அபுதாபியில் இருந்து 5,600 பேரும் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 57 விமானங்கள் 10,271 இந்தியர்களை இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் மரணித்தவர்களின் 42 உடல்கள் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு வழிவகை செய்யப்பட்டது. அமீரகத்தில் தங்கியுள்ள இந்தியர்களின் நலனிற்காக தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அபுதாபியிலிருந்து கடந்த மாதம் மட்டும் 23 சிறப்பு விமானங்களும் ஒன்பது சார்ட்டட் விமான சேவைகளும் இயக்கப்பட்டதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

“வந்தே பாரத் மிஷன்” தொடங்கப்பட்டதிலிருந்து மே 31 வரை மொத்தம் 5,642 பயணிகள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சுமார் 23 சிறப்பு விமானங்களில் 4,074 பயணிகள் பயணம் செய்து இந்தியா திரும்பியுள்ளனர். இவர்களில் ஒன்பது பெரிய நிறுவனங்களின் தொழிலாளர்கள் 1,568 பேர் இந்தியா திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இன்று எட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: