கத்தாரிலிருந்து இரண்டாம் கட்டமாக சூடானுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

கத்தாரிலிருந்து இரண்டாம் கட்டமாக சூடானுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

தோஹா, செப்-03: கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் சூடான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் கட்டமாக விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது.

அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவின் பேரில் இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்களை சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமிரி விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் 60 டன் நிவாரணப் பொருள்களுடன் நேற்று காலை சூடானுக்கு புறப்பட்டது. இதன் மதிப்பு 5 மில்லியன் டாலராகும் இது கத்தார் நாட்டின் அவசரக்கால தேவைக்கும், அபிவிருத்திக்குமான நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டதாகும்.

இந்த பயணத்துடன் கத்தாரின் லெக்வியா (Lekhwiya) தேடல் மற்றும் மீட்புக் குழுவினர்களும் சென்றுள்ளனர். லெக்வியா தலைமையில் சகோதர மற்றும் நட்பு நாடுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் செய்து வருகின்றது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: