கத்தாரில் FIFA கால்பந்து உலக கோப்பைக்கான சின்னம் வெளியிடப்பட்டது.

கத்தாரில் FIFA கால்பந்து உலக கோப்பைக்கான சின்னம் வெளியிடப்பட்டது.

கத்தாரில் வரும் 2022 ஆம் ஆண்டு FIFA கால்பந்து உலக கோப்பைக்கான போட்டி நடைபெற உள்ளது. நடைபெற உள்ள கால்பந்து போட்டிக்கான உலக கோப்பையின் வடிவத்தை நேற்று இரவு கத்தார் நேரப்படி 20:22 க்கு வெளியிடப்பட்டது. அதாவது போட்டி நடைபெற இருக்கும் ஆண்டை நினைவு படுத்தும் விதமாக சரியாக இரவு 20:22 மணிக்கு அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்டது.

FIFA 2022 உலக கோப்பையின் சின்னத்தை கத்தாரிலுள்ள பிரபலாமான கட்டிடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. பரஜ் தோஹா, கத்தாரா ஆம்பிதியேட்டர், உள்துறை அமைச்சக கட்டிடம், சூக் வாக்கிப், மஸ்ரிப் மற்றும் அல் ஜுபாராஹ் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது.

குவைத், ஓமான், லெபனான், ஜோர்டான், துனிஷியா, அல்ஜீரியா, மொராக்கோ, இராக், பாலஸ்தீன், லிபியா மற்றும் சூடான் ஆகிய இந்த நிகழ்வில் பங்கேற்றது. குவைத் சிட்டியின் குவைத் டவரிலும், லெபனானின் ரவுச் ராக், துனிஷியாவின் தி போர்ட் ஆப் ஹம்மாமத் ஆகியவற்றிலும்  FIFA 2022 உலக கோப்பையின் சின்னத்தை காட்சிப்படுத்தப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட் உலக கோப்பையின் சின்னத்தை லட்சக்கணக்கில் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: