கத்தார்-இந்தியா 2019 கலாச்சார கண்காட்சி கட்டாராவில் துவங்கியது.

கத்தார்-இந்தியா 2019 கலாச்சார கண்காட்சி கட்டாராவில் துவங்கியது.

கத்தார் கலாச்சார மையத்தின் கட்டாராவில் இரண்டு கண்காட்சிகள் திறக்கப்பட்டுள்ளது. ஒன்று கத்தார் கலைஞர்களான மொஹமத் ஜுனைத், ஆயிஷா அல்-மொஹன்னதி மற்றும் இந்தியக் கலைஞர் மகேஷ் குமார் ஆகியோரின் நுண்கலை கண்காட்சி . மற்றொன்று கத்தார் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சியாகும்.

நுண்கலை கண்காட்சியில் மொஹமத் ஜுனைத், ஆயிஷா அல்-மொஹன்னதி ஆகியோரின் சிறந்த படைப்புகள் இடம்பெற்றுள்ளது. அதே போல் மகேஷ் குமார் இந்தியக் கலாச்சாரங்கள் மற்றும் மனித பாரம்பரியத்தின் பல்வேறு ஓவியங்களை தமது படைப்புகளாக வெளிப்படுத்தியுள்ளார்.

புகைப்பட கண்காட்சியை இளைஞர் மையத்தின் ஒத்துழைப்புடன் கட்டாராவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த புகைப்பட கண்காட்சியில், கத்தார் மற்றும் இந்தியப் புகைப்படக் கலைஞர்களின் சுமார் 50 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. கத்தார் மற்றும் இந்தியா மரபுகள் மற்றும் இயற்கைக்காட்சிகள் இந்த கண்காட்சியில் காணமுடிகிறது.

இவ்விரண்டு கண்காட்சிகளும் இந்த மாதம் இறுதி வரை அதாவது செப்டம்பர் 28 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: