காங்கோ விமான விபத்தில் 23 பேர் பலி.

காங்கோ விமான விபத்தில் 23 பேர் பலி.

காங்கோவின் கோமாவில் சிறிய விமான விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த இந்த விபத்தில் பலியான இருபத்தி மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் மகுண்டி செய்தி நிறுவனத்திடம் கூறினார். இது சம்பந்தமாக கோமா விமான நிலைய அதிகாரி ரிச்சர்ட் மங்கலோபா கூறுகையில் இந்த விபத்தில் அனைவரும் இறந்திருக்கக் கூடும் என்று கூறினார்.

டோர்னியர்-228 விமானம் கோமாவிற்கு வடக்கே 350 கிலோமீட்டர் (220 மைல்) தொலைவில் உள்ள பெனிக்குச் சென்றது. அப்போது விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் இறங்கியது. விமானத்தில் 17 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். “விமானம் காலை சுமார் 9 மணியளவில் புறப்பட்டது” என்று பிஸி பீ (Busy Bee) விமான நிறுவன ஊழியர்களின் உறுப்பினர் ஹெரிட்டியர் சைட் மமடோ கூறினார். வடக்கு கிவு மாகாணத்தில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று விமானங்களை இயக்குகிறது. இந்த விமான நிறுவனம் சமீபத்தில் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் குடியிருப்பு பகுதியில் இறங்கி விபத்துக்குள்ளானதால் இதுவரை தரையில் பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: