காணாமல் போன இந்தியச் சிறுவன் இதுவரையிலும் கிடைக்கவில்லை.

காணாமல் போன இந்தியச் சிறுவன் இதுவரையிலும் கிடைக்கவில்லை.

ஷார்ஜா (நவம்-24): கடந்த வெள்ளிக்கிழமை டியுசனுக்கு சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று அவனது பெற்றோர்கள் கூறியுள்ளனர். சிறுவனின் பெயர் அமேயா சந்தோஷ். இவரது குடும்பம் மலையாளமாக இருந்தாலும் இவர்கள் புனேவில் வசித்துவருகின்றனர்.

சிறுவன் காணாமல் போனது சம்பந்தமாக ஏற்கனவே வாட்ஸ்அப்-ன் மூலம் வாய்ஸ் மெசேஜ் பலருக்கும் அனுப்பியுள்ளனர் அவரது பெற்றோர்கள். அதைக் கண்டு தமது மகனை யாரேனும் தமது வீட்டிற்குத் திரும்ப அழைத்து வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலிருந்துள்ளனர் அவனது பெற்றோர்களான சந்தோஷ் ராஜனும் பிந்துவும்.

ஆனால் சிலர் அந்த சிறுவன் கிடைத்துவிட்டதாக வதந்திகளையும் சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் அது உண்மையில்லை என்று அந்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது மகனை ஷார்ஜா காவல்துறையின் உதவியுடன் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அமேயா சந்தோஷ் காணாமல் போன அன்று கிளி பச்சை சட்டை, நீல நிறத்தில் கால்சட்டையும் அணிந்து கையில் கருப்பு பையுடனும் இருந்துள்ளார். அவனது மணிக்கட்டில் கருப்பு கயிறு கட்டியிருப்பான் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவனிடம் 10 திர்ஹம் மட்டும் இருந்தது என்று அவரது தாயார் பிந்து கூறினார். தனது மகன் ஒரு மொபைல் போனை வைத்திருந்தார் என்றும் அவர் காணாமல் போனதிலிருந்து அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: