குவைத்திற்குள் விசா மாற்றிக்கொள்ள வீட்டுப் பணியாளருடன் ஸ்பான்சர்களும் இருக்க வேண்டும்.

குவைத்திற்குள் விசா மாற்றிக்கொள்ள வீட்டுப் பணியாளருடன் ஸ்பான்சர்களும் இருக்க வேண்டும்.

குவைத் (நவம்-23): வீட்டுப் பணியாளர் (ஆண் அல்லது பெண்) ஒரு ஸ்பான்சரிடமிருந்து இன்னொருவருக்குச் சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையில் மட்டும் மாற்றம் செய்து கொள்ளமுடியும். ஸ்பான்சர்கள் மாற்றிக் கொள்ளும்போது வீட்டுப் பணியாளர்களுடன் இரண்டு ஸ்பான்சர்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது சம்மந்தமாக குடியிருப்பு மற்றும் பொது விவகாரங்களுக்கான நிர்வாக இயக்குநர் பிரிகேடியர் அப்துல்காதர் ஷாபன் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வீட்டுத் தொழிலாளர்களின் ஒப்புதல் இல்லாமல் வீட்டுப் பணியாளர்களை மாற்றும் நடைமுறையைத் தடைசெய்யவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களை மாற்றுவதில் தொடர்புடைய முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புரவலரிடமிருந்து மற்றொரு ஸ்பான்ஸருக்கு மாற்றும் போது தொழிளார் ஒப்புதலும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: