குவைத்தில் இராணுவ வாகனத்தைக் கடத்தியவரை துரத்தி பிடித்து கைது. 

குவைத்தில் இராணுவ வாகனத்தைக் கடத்தியவரை துரத்தி பிடித்து கைது.

குவைத் நாட்டில் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் இராணுவ வாகனத்தைத் திருடிச் சென்றுள்ளார். உடனடியாக அந்த வாகனத்தை துரத்தி பிடித்து அந்த 25 வயது வாலிபரைக் கைது செய்தனர். வாகனத்தை ஓட்டி தப்பித்தபோது சில வாகனங்கள் மீது இடித்துச் சென்றுள்ளான். இந்த சம்பவம் கடந்த 11-ம் தேதி நடந்துள்ளது.

குவைத் சபனிலுள்ள இராணுவ முகாமுக்கு முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தைத் திருடியுள்ளார் அந்த நபர். இவர் வாகனங்களைத் திறப்பதிலும் திருடுவதிலும் கைதேர்ந்தவனாக இருந்தவன் என்றும் கள்ளச் சாவியைக் கொண்டுதான் இந்த இராணுவ வாகனத்தைத் திறந்துள்ளான் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை எடுத்துச் சென்றதைக் கண்டதும் இராணுவ வீரர்கள் இராணுவ வாகனங்களுடன் பின் தொடர்ந்து துரத்தியுள்ளனர். உடனடியாக உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் கொடுத்த பின்னர் வாகனத் திருட்டு சம்பந்தமான தகவல்களை அனைத்து பாதுகாப்புப் படை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத்தின் ஒரு குழுவாக அமைக்கப்பட்டு வாகனத்தை அதிரடியாகத் துரத்தி கைது செய்யப்பட்டார். வாகனத்தைக் கடத்தியவன் சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டியுள்ளான். இதன் மூலம் ஒரு சில வாகனங்கள் மீது மோதியும் உள்ளான். இராணுவ வாகனத்தைக் கடத்திய குற்றவாளியின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தை அந்நாட்டின் தினசரி அரப் டைம்ஸ் காணொளி வெளியிட்டுள்ளது.

22 yr old Kuwaiti arrested for stealing Ministry of Defense vehicle – Complete Video with police chase

22 yr old Kuwaiti arrested for stealing Ministry of Defense vehicle – Complete Video with police chase#Kuwait #Police #KuwaitPolice #MinistryOfDefense

Gepostet von Arab Times Kuwait am Donnerstag, 12. September 2019

source – Arab Times

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: