குவைத்தில் ஐந்து பிச்சைக்காரர்கள் கைது

குவைத்தில் ஐந்து பிச்சைக்காரர்கள் கைது

பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து பிச்சை எடுத்ததற்காக அரபு நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக குவைத்தின் தினசரி அல்-அன்பா தெரிவித்துள்ளது.

மேலும் அந்த செய்தியில் இவர்களில் இருவர் மூன்று வயதுடைய குழந்தைகள் என்று குறிப்பிட்டுள்ளது. வியாபாரங்கள் நடக்கும் சந்தைகளில் பிச்சை எடுக்கும் போத பிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இவ்வாறு கையேந்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிச்சை எடுப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வைக் குறைக்க சாதாரண உடையில் ஆய்வாளர்களை நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: