குவைத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் பறக்கவிட்டதற்காக 3 நபர்கள் கைது.

குவைத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் பறக்கவிட்டதற்காக 3 நபர்கள் கைது.

குவைத் நாட்டை சேர்ந்த மூன்று நபர்களை குவைத்தின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து மாநில பாதுகாப்பு காவல்துறையிடம் ஆரம்பக்கட்ட விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாகக் குவைத் தினசரி நாளிதழான அல்-அன்பா தெரிவித்துள்ளது.

புர்கன் பகுதிக்கு அருகே ட்ரோன்களை பறக்கவிட்டதற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது. ஆளில்லா விமானத்தைக் கண்காணிக்கக்கூடிய நவீன சாதனம் மூலம் தடைசெய்யப்பட்ட பகுதியில் பறந்த அந்த ட்ரோன்களை கண்காணிக்கப்பட்டதாக விபரமாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் ஏவப்பட்ட இடத்தை அடையாளம் கண்ட பின்னர், பறக்கவிட்ட அந்த நபர்களைப் பாதுகாப்புக் குழு அணுகிக் காவலில் எடுத்து விசாரித்துள்ளது. இதுபோன்ற விமானங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியும் இது போன்ற செயல்கள் செய்துள்ளதால் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அல்ஜோரின் தடைசெய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் பறக்கவிட்டதற்காக இரண்டு பிலிப்பைன் நாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: