குவைத்தில் வேலையின்றி தவித்தவர்கள் தூதரக உதவியுடன் இந்தியா திரும்பினர்

குவைத்தில் வேலையின்றி தவித்தவர்கள் தூதரக உதவியுடன் இந்தியா திரும்பினர்
இரண்டு மாததிற்கு முன்பு குவைத்திற்கு வேலைக்கு வந்த தமிழக இளைஞர் மற்றும் கேரளா இளைஞர்கள் இரண்டு பேர் வேலையின்றி தவித்த நிலையில் இந்திய தூதரக உதவியுடன் தாயகம் திரும்பியுள்ளனர்.

உணவக வேலைக்காக வந்த இவர்களுக்கு இரண்டு மாதம் ஆகியும் குவைத்தில் வேலை செய்வதற்கான அக்காமா எனும் ஐடி கார்டு எடுத்து தரப்படவில்லை. எந்த உணவகத்திற்கு வேலைக்கு வந்தார்களோ அந்த உணவக உரிமையாளர் வேறு ஒருவருக்கு உணவகத்தை விற்றுவிட்டார். இதனால் அந்த மூவரின் வேலை கேள்விக்குறியானது. விசா எடுத்தநபரும் குவைத்தில் இல்லை அவரும் ஊருக்கு சென்று விட்டதால் ஆதரவு இல்லாமல் தவித்தனர். உன்பதற்கு உணவும் இல்லாமல் வெளியே சென்று மற்றவர்களிடம் உதவிக் கேட்க அக்காமாவும் இல்லாமல் இருந்தனர்.

வேலையின்றி தவித்த அந்த மூவரும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்திடம் உதவி கேட்டுள்ளனர். விபரம் அறிந்து நலச்சங்கத்தினர் நேரில் சென்று பார்த்து விபரங்களை கேட்டு தெரிந்துள்ளனர். உடனடியாக அந்த மூவரின் பாஸ்போர்டையும் அவர்களது முதலாளியிடம் இருந்து தூதரகம் மூலமாக வாங்கினர். கேரள தொண்டு அமைப்பு ஒன்று அந்த மூவருக்கான விமான பயணச்சீட்டு கொடுத்து உதவியது. அந்த மூவரையும் குவைத்தில் இருந்து கொச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: