குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்ற வாக்கத்தான் போட்டி

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்ற வாக்கத்தான் போட்டி

குவைத்தில் இயங்கும் நேஷனல் பேங்க் ஆஃப் குவைத் (National Bank of Kuwait – NBK) வங்கி தனது 25வது வாக்கத்தான் (தொலைதூர நடைப் பயணம்) போட்டியை சனிக்கிழமை அன்று நடத்தியது. போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். போட்டியை வங்கியின் உயரதிகாரிகள் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர். குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீயின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட சங்கத்தின் துணை நிர்வாகிகள் போட்டியில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் குவைத் நாட்டைச் சேர்ந்த குடிமக்களும், இந்தியர்கள் உட்பட பிற நாட்டைச் சேர்ந்தவர்களும் 6 வயது முதல் 60 வயது வரை பெண்கள் உட்பட 19,600 நபர்கள் கலந்து கொண்டனர். கிரீன் ஐலேண்ட் பூங்காவில் தொடங்கி பதினொரு கிலோ மீட்டர் தூரம் கடற்கரை நெடுஞ்சாலை வழியாக சென்று ஷுவைக் கடற்கரை பூங்க பகுதியில் முடிவடைந்தது. போட்டியின் முடிவில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

முன்பதிவு செய்திருந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு ‘டி ஷர்ட் மற்றும் தொப்பி’ வழங்கப்பட்டன. ஒவ்வொரு கிலோ மீட்டர் முடிவிலும் தகவல் பலகையுடன் போட்டியாளர்களை உற்சாப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கனிசமான அளவில் தமிழர்களும் பங்கேற்ற இப்போட்டியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கலீல் பாகவீ, நூருல் அமீன், முஹம்மது சுல்தான், சஃபியுல்லாஹ், முஹம்மது ஃபாரூக், அப்துல் மாலிக், முஹம்மது சித்தீக், முஹம்மது காசிம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.

– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: