கத்தாரில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் மற்றும் போர்டோ கேபின்கள் அகற்றம் 

கத்தாரில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் மற்றும் போர்டோ கேபின்கள் அகற்றம்.

சமீப காலமாக கத்தாரில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அல் தாயீன் (Al Daayen) நகராட்சியின் பொது கட்டுப்பாட்டுப் பிரிவானது கேட்பாரற்று கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவதற்கான குழு மற்றும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கத்தார் நாட்டின் பொதுச் சுகாதாரம் குறித்த 2017 ஆம் ஆண்டின் 18 ஆம் எண் சட்டத்தின் அடிப்படையில் கேட்பாரற்று கைவிடப்பட்ட 13 வாகனங்கள் மற்றும் மூன்று போர்டோ கேபின்கள் அகற்றப்பட்டதாக நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் விதிமுறைகள் மீறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: