கொரோனா விதிமுறை மீறல்களுக்கு அபராதம்.

கொரோனா விதிமுறை மீறல்களுக்கு அபராதம்.

கொரோனா விதிமுறை மீறல்களுக்கு அபராதம். ஐக்கியா அரபு அமீரகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எண்ணற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமீரக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கான புதிய அபராதங்களை அரசு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக திங்களன்று அபராதப் பட்டியல் வெளியிடப்பட்டது.

 • பூங்காக்கள், உடற்பயிற்சி நிலையங்கள், கபே, மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கால அளவை மீறி திறந்தால் 50,000 திர்ஹம் அபராதம்.
 • கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது பாதிக்கப்பட்டிருந்த நபர்களை  கண்காணிக்கும் வகையில் உறுவாக்கப்பட்ட அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்ய மறுப்பவர்களுக்கு 10,000 திர்ஹம் அபராதம்.
 • கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது பாதிக்கப்பட்டிருந்த நபர்களை கண்காணிப்பதற்கு வழங்கப்பட்ட கண்காணிப்பு சாதனத்தை சேதப்படுத்துபவர்களுக்கு 20,000 திர்ஹம் அபராதம்.
 • பொதுமக்கள் ஒன்று கூடுவது தடை செய்யபட்டுள்ளது. இதை மீறி விருந்து வைப்பது அல்லது ஒன்றிணைய வழி செய்வது போன்ற குற்றங்களுக்கு விருந்து அல்லது கூட்டம் ஏற்பாடு செய்தவருக்கு 10,000 திர்ஹம் அபராதமும், அதில் கலந்து கொண்ட ஒவ்வொரு நபருக்கும்  தலா 5,000 ஆயிரம் அபராதம்.
 • காரில் மூன்று நபர்களுக்கும் அதிகமானோர் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல முக கவசம் அணிவதும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 3,000 திர்ஹம் அபராதம்.
 • பணிபுரியும் இடங்களில் முகக் கவசம் பயன்படுத்தவில்லை எனில் நிறுவனத்திற்கு 5,000 திர்ஹம் அபராதமம். முகக்கவசம் அணியாத பணியாளருக்கு 500 ரூபாய் அபராதம்.
 • நிறுனங்கள் 30 சதவிகித பணியாளர்களை மட்டுமே பணியில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை மீறும் நிறுவனங்களுக்கு 3,000 திர்ஹம் அபராதம்.
 • வேலை செய்யும் இடங்கள் மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனி நபருக்கு 3,000திர்ஹம் அபராதம். நிறுனங்களுக்கு 5,000 திரஹம் அபராதம்.
 • அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாக திறந்து வைக்கும் கடைகளுக்கு 5,000 திர்ஹம் அபராதம்.
 • கொரோனா நோய் பரிசோதனை செய்ய மறுப்பவர்களுக்கு 5,000 திர்ஹம் அபராதம்.
 • இரு வாரங்களுக்கு பிறகு திரும்பவும் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்த மறுத்தால் 1,000 திர்ஹம் அபராதம்.
 • கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு 3,000 திர்ஹம் அபராதம்.
 • கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள் பொது இடங்களில் சுற்றினால் 50,000 திர்ஹம் அபராதம்.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கையாண்டு கரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: