முறையாகச் சம்பளம் தராததைக் கண்டித்து 900 ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

முறையாகச் சம்பளம் தராததைக் கண்டித்து 900 ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

குவைத்: குவைத்தில் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்காததைக் கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பாதுகாப்புத் துறை விவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களைத் தொடர்பு கொண்டதாக அந்நாட்டின் செய்தி ஊடகம் அல் அன்பா தெரிவித்துள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எந்த கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை விவகார அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் தங்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் இதனால் தங்களுக்குண்டான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துள்ளனர்.

நிறுவனம் எதனால் ஊழியர்களுக்குச் சம்பள வழங்கப்படவில்லை என்ற விபரம் இதுவரை தெரிவில்லை.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: