சவுதியின் மீதான தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பிற்காக அமெரிக்கா இராணுவத்தை அனுப்ப முடிவு.

சவுதியின் மீதான தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பிற்காக அமெரிக்கா இராணுவத்தை அனுப்ப முடிவு.

சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களான அராம்கோவின் மீதான தாக்குதல்களை அடுத்து இராணுவப் படைகளை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மொத்த துருப்புகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படவில்லை என்று பிபிசிக்கு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த இரண்டு எண்ணெய் உற்பத்தி நிலையங்களின் மீதான தாக்குதல்களுக்கு ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் ஈரானையே குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுக்கு எதிரான உச்சபட்ச பொருளாதாரத் தடைகளை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். அதே நேரத்தில் இராணுவ மோதலைத் தவிர்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்காவிடம் உதவி கோரியதாக தெரிவித்த எஸ்பர், வான் மற்றும் ஏவுகணை தாக்குதலை தடுப்பதற்கு இந்த படைகள் அதிக கவனம் செலுத்தும். மேலும் அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இராணுவ உபகரணங்களை வழங்குவதை துரிதப்படுத்தும் கூறினார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: