சவுதி அராம்கோவில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்து.

சவுதி அராம்கோவில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்து.

இன்று (சனிக்கிழமை) அப்காய்க் மற்றும் குரைஸ் மாகாணங்களில் உள்ள இரண்டு சவுதி அராம்கோ தொழிற்சாலைகள் மீது ட்ரோன்  தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தை அந்நிறுவனம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகச்  சவுதி உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலானது தொழிற்சாலையில் குறிப்பிட்ட எந்த பகுதியில் நடந்துள்ளது, அதனால் உண்டான சேதாரம் என்ன என்பதைப் பற்றிய கேள்விக்கு  அராம்கோ நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் தஹ்ரானுக்கு தென்மேற்கே 60 கிமீ (37 மைல்) தொலைவில் உள்ள அப்கைக், உலகின் மிகப்பெரிய எண்ணெய் பதப்படுத்தும் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. குரைஸ், தென்மேற்கே 190 கி.மீ தொலைவில் நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணெய் வயலைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2006-ம் ஆண்டு அப்காய்க் மீது அல்கொய்தா தாக்குதல் நடத்தியது. அதைத் தடுத்த பாதுகாப்புப் படையினர் தாக்குதலை முறியடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: