சவூதிக்குச் சுற்றுலா வந்தால் என்ன பார்க்கலாம்?

சவூதிக்குச் சுற்றுலா வந்தால் என்ன பார்க்கலாம்?

சவூதி அரேபியாவின் வரலாற்றில் முதன்முறையாகச் சர்வதேச பார்வையாளர்களின் சுற்றுலா வருகைக்காக தமது நாட்டின் கதவுகளைத் திறக்கிறது. வெள்ளிக்கிழமை (நேற்று) ரியாத்தில் அத்-திரியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சி நிகழ்வில் சுற்றுலா விசா சம்பந்தமான விபரங்கள் அறிவிக்கப்பட்டது .

சவூதி அரேபியாவிற்குச் சுற்றுலா வருபவர்களுக்கு இதுவரை ஆராயப்படாத பாரம்பரிய தளங்கள், இயற்கை அழகுடன் கூடிய கலாச்சாரங்கள் மேலும் சவுதி அரேபியாவின் பல பொக்கிஷங்களைக் கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியுமாவார்கள். சவூதி அரேபியா 13 பிராந்தியங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. நாட்டில் ஐந்து உலக பாரம்பரிய தளங்களும் உள்ளது அவை:

 1. ஜோர்டானில் பெட்ராவுக்கு தெற்கே நபாடேயர்களின் நாகரிகத்தின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட தளமான அல்-உலாவில் உள்ள மடெய்ன் சலே.
 2. சவுதி மாநிலத்தின் முதல் தலைநகரான அத்-திரியாவில் உள்ள துரைஃப்.
 3. வரலாற்று ஜெத்தாவின் மக்காவின் நுழைவாயில், இது ஒரு தனித்துவமான கட்டிடக்கலை பாரம்பரியத்தால் வகைப்படுத்தப்படுகிறது.
 4. ஹெயில் பிராந்தியத்தில் ராக் ஆர்ட், மனித மற்றும் விலங்கு உருவங்களின் 10,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள்.
 5. அல்-அஹ்சா ஒயாசிஸ், 2.5 மில்லியன் பேரிட்சை மரங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பேரிட்சை சோலை.

அதே போலச் சமகால கலாச்சாரம் செழித்து வளரும் இடமாகவும் சவூதி அரேபியா உள்ளது.

 • தெஹ்ரானில் உலக கலாச்சாரத்திற்கான கிங் அப்துல்அஸிஸ் மையம்.
 • ஜெத்தா கடற்கரையில் நவீனத்துவ சிற்பக்கலை பூங்கா.
 • ஜெத்தாவிலுள்ள பாரம்பரிய கலைகளின் ஜமீல் ஹவுஸ்.
 • ஜெத்தாவின் வரலாற்றுப் புகழ்மிக்க நாசிஃப் ஹவுஸ்.
 • அசிர்-ல் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் விழா.
 • அல்-உலாவில் ஆண்டுதோறும் நடைபெறும் குளிர்கால திருவிழா.
 • செங்கடல் சர்வதேச திரைப்பட விழா மார்ச் 2020 இல் தொடங்கப்படுகிறது.

மேலும் அசிர்-ல் பசுமையான மலைகள், செங்கடலின் படிக நீர்நிலைகள், தபூக்-ல் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்ட சமவெளிகள் மற்ற காலங்களில் அழகான மணல் மேடுகள் உள்ளிட்ட பலவிதமான நிலப்பரப்புகளையும் சவுதி அரேபியா கொண்டுள்ளது. இத்தோடல்லாமல் ரியாத் நகரத்தின் அருகிலுள்ள கித்தியா பொழுதுபோக்கு நகரம், நியோம் என்று பல புதிய சுற்றுலாத் தலங்கள் தற்போது கட்டுமானத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: