சவூதிக்கு மேலும் துருப்புக்களை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சவூதிக்கு மேலும் துருப்புக்களை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 14 ட்ரோன்கள் மூலமாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் அமெரிக்கப் படைகளை உயர்த்துவதாக பென்டகன் அறிவித்தது.

இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்க சிறப்பு பிரதிநிதி பிரையன் ஹூக் கூறுகையில் “செப்டம்பர் 14 அன்று சவுதி அரேபியா மீதான ஈரானிய தாக்குதலுக்குப் பின்னர் சவுதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. “பிராந்தியத்தில் மீண்டும் இது போன்ற தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா பரிசீலித்து எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இவை உள்ளது” என்று  அவர் கூறினார்.

“சவுதி அரேபியா ஒரு நீண்டகால பாதுகாப்பு பங்காளியாகும். மேலும் அவர்களின் பாதுகாப்புகளுக்கு துணைபுரிவதற்கும், சர்வதேச ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் கூடுதல் ஆதரவைக் கோரியுள்ளது” என்று திரு ஹூக் கூறினார்.

அமெரிக்க அதிகாரி தனது அரசாங்கம் ஈரானுடனான மோதலை நாடவில்லை. ஆனால் ஈரான் அல்லது அதன் பிரதிநிதிகளிடமிருந்து எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக வாஷிங்டன் தனது துருப்புக்களையும் நலன்களையும் பாதுகாக்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: