சவூதி அரேபிய மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

சவூதி அரேபிய மருத்துவமனையில் வேலை வாய்ப்பு


சவூதி அரேபிய நாட்டில் ஜீபைலில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35-வயதுக்குட்பட்ட டிப்ளோமா, பி.எஸ்.சி படித்த ஆண் செவிலியர்கள் மற்றும் 40 வயதுக்குட்பட்ட 2 ஆண்டு பணி அனுபவமுள்ள பி.எஸ்.சி படித்தவர்கள் பெருமளவில் தேவைப்படுகிறது.

மேலும் 40 -வயதுக்குட்பட்ட பெண் லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன், சோனோகிராமி டெக்னீசியன் மற்றும் எம்.டி. தேர்ச்சியுடன் 60 வயதுக்குட்பட்ட ஆண்,பெண் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அனுபவத்திற்கேற்ற மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் அந்நாட்டின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ளவர்கள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் 30.09.2019-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளத்திலும்மற்றும் 044-22505886, 22500417, 8220634389 என்ற எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

source – தினமணி

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: