சித்தர்கள் கூறும் பருவகால பழக்க வழக்கங்களும் உணவு முறைகள்

சித்தர்கள் கூறும் பருவகால பழக்க வழக்கங்களும் உணவு முறைகள்

ஆண்டு ஒன்று போனால் வயதொன்று கூடும். அதற்கு முன்னால் ஒவ்வொரு ஆண்டுகளையும் நாம் கடக்க நமது வாழ்கை நெறிமுறைகளை தெரிந்து கொண்டு நோயற்ற வாழ்வு வாழவேண்டும். அப்படிப்பட்ட வாழ்கை தான் இந்த மண்ணில் நமக்கு கிடைத்த இனிமையான பேரின்ப வாழ்வாகும்.

ஒரு வயது என்பது 12 மாதங்களை கடப்பது.

ஒவ்வொரு 12 மாதங்களில் 6 பருவங்களை நாம் சந்தித்துதான் நாம் உயிர் வாழமுடியும்.

நமது வாழ்க்கை முறையை நிர்ணயக்கும் 6 பருவகால மாற்றங்களுக்கு கட்டுப்பட்டு இயற்கை நியதிப்படி நாம் உண்ணும் உணவாலும், உழைப்பாலும் மற்றும் உடற்பயிற்சியாலும் நம்மை நாமே நெறிப்படுத்தி வாழ்ந்தால் தான் வாழ்க்கையில் நோய்நொடி தொல்லைகள் இல்லாமல் நமது உடலும் உயிரும் உள்ளமும் இனிதாகி மருந்துகள் இல்லாத சுக வாழ்வு சுவைக்கும்.

இது போன்ற பிணி அனுகாத வாழ்க்கை முறையை சித்தர்கள் வாழ்ந்து காட்டி உள்ளனர். மொத்தம் ஆறு பருவகாலங்களில் நாம் என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும். மேலும் அக்காலத்திற்கு ஏற்ற உணவுவின் சுவை மற்றும் உடற்பயிற்சி, உறக்கம், குளியல், நறுமண பூச்சு போன்றவைகளை கூட நமது சித்தர்கள் வகுத்து உள்ளார்கள்,

அதை கீழே உள்ள அட்டைவனையில் காண்போம்.

1. இளவேனிர்காலம் – சித்திரை, வைகாசி பசு நெய், துவரை, தேன், கோதுமை, முக்கனிகளான மா,பலா,வாழை, முந்திரி, கற்கண்டு, காய்கறி, கடலை, வெட்டிவேர் மற்றும் சந்தன சத்துக்கள் சேர்ந்த நீர் அருந்தலாம் நெய்ப்பு குணம் உள்ளது. புளிப்பு இனிப்பு பொருந்திய உணவுகளும் காலை 6-7.30 5-7 மணி நேரம் பகல் உறக்கம் கூடாது உடற்பயிற்சி செய்யலாம். இன்பமாக கலந்து வாழ உகந்த காலம் சந்தனம் பூசி வரலாம்

2. முதுவேனிர்காலம் – ஆனி, ஆடி சம்பா அரிசி, முட்டை, ஆட்டிறைச்சி, முக்கனிகள், மாதுளை, திராட்சை, ஏலம், ஈச்சம்பழம், கற்கண்டு, மாமிச உணவுகள் வெட்டிவேர் கலந்த நீரை அருந்த நலம் தரும் துவர்ப்பு, இனிப்பு சுவை உள்ள உணவு(கார்ப்பு, உப்பு, புளிப்பு தவிர்பது நலம்) காலை 6-8 மணி 5-7 மணி நேரம் பகலில் சிறிது நேரம் நித்திரை செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உடல் வன்மை குறையும் புணர்ச்சி கூடாது சந்தனம் பூசி வரலாம்.

3. கார்காலம் – ஆவணி, புரட்டாசி துவரை, உளுந்து, பயிறு, பழைய தானியம், மாமிசம், தேனி, பூண்டு, காய்கறிகள், பஞ்சகவியம் சேர்ந்த நீர் மோர் அருந்தலாம், ஆறிபோன உணவுகளை உண்ண கூடாது புளிப்பு, உப்பு, இனிப்பு சுவையுள்ள உணவுகளை உண்ணலாம். காலை 5-7 மணி 5-7 மணி நேரம் பகலில் நித்திரை செய்யலாம் உடற்பயிற்சி தேவை புணர்ச்சி செய்யலாம் பச்சை கற்பூரம், கத்தூரி, அகில், சந்தனம் சேர்ந்த கலவையை பூசி கொள்ளலாம்.

4. கூதிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை சம்பா அரிசி, பயறு, சர்க்கரை, நெல்லிக்கனி, தேன், வேப்பம்பூ, நெய், எண்ணெய், வாழை, நீரை காய்சாமலே அருந்தலாம் கைப்பு, இனிப்பு, சுவை உள்ள உணவு காலை 5-8 மணி 6-8 மணி நேரம் உடற்பயிற்சி அதிகம் தேவை புணர்ச்சி செய்யலாம் வெட்டிவேர், பச்சை கற்பூரம், சந்தனம் ஆகியன கலந்து பூசிக் கொள்ளலாம்.

5. முன்பனிகாலம் – மார்கழி, தை மாமிசம், உளுந்து, கோதுமை, கரும்பு, வெல்லம், அரிசி, திராட்சை, நெய், கிழங்கு வகைகள் இனிப்பு, உப்பு, புளிப்பு சுவையுள்ள உணவுகளை மிகுதியாக உண்ணலாம். ஆறு சுவைகளும் இக்காலத்தில் உண்ண நலம் பயக்கும் காலை 6-8 மணி 7-8 மணி நேரம் உடற்பயிற்சி அதிகம் தேவை புணர்ச்சி செய்யலாம். குங்குமப்பூ, கிச்சிலி கிழங்கு, அசிர்சாந்து, கத்தூரி, சந்தனம், சவ்வாது ஆகியவற்றை பன்னீர் விட்டு குழைத்து பூசி வரவும்.

6. பின்பனிகாலம் – மாசி, பங்குனி பயறு, காய்கறி, பழரசங்கள் மற்றும் முன்பனி கால உணவுகளை உண்ணலாம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு காலை 6-8 மணி 6-7 மணி நேரம் உடற்பயிற்சி அதிகம் தேவை புணர்ச்சி செய்யலாம் குங்குமப்பூ, கிச்சிலி கிழங்கு, அசிர்சாந்து, கத்தூரி, சந்தனம், சவ்வாது ஆகியவற்றை பன்னீர் விட்டு குழைத்து பூசி வரவும்.

அட்டைவனையில் கூறிய படி உணவு மற்றும் பிற ஒழுக்கங்களை நாம் அன்றாட வாழ்வில் கடைபிடித்தோம் எனில் சித்தர்களின் பிணியணுகா வாழ்வு வாழ்வது திண்ணம்.

குறிப்பு:  நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.

About the Author

Leave a Reply

*

%d bloggers like this: