சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி! பலர் படுகாயம்!

சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி! பலர் படுகாயம்!

மாவே: கிழக்கு உத்தர பிரதேசத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.  இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பலர் ஈடிபாடுகளில் சிக்கியிருக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கிழக்கு உத்தர பிரதேசத்தின் மாவே மாவட்டத்தில் முகமதாபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் தாக்கம் மிக வலுவாக இருந்துள்ளது. இதனால், அந்த முழு கட்டிடமே இடிந்து சரிந்து விழுந்ததுள்ளது.

இந்த சம்பவத்தைப் பற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, எதோ வெடித்த மாதிரி பெரும் சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து, அக்கட்டிடத்திலிருந்து தீ பற்றி எரிந்தது என்று தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படுள்ளது. விபத்து சம்பவம் ஏற்பட்ட இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்கள் என ஒரு பெரும் கூட்டமே அந்த இடத்தை சுற்றியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: