சீனாவில்  நடந்த பஸ் விபத்தில் 36 பலி.

சீனாவில்  நடந்த பஸ் விபத்தில் 36 பலி.

சனிக்கிழமை காலை சீனாவில் நடந்த விபத்தில் 36 பலியானார்கள் மேலும் 36 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எதிர் பாதையில் சென்றது. அப்போது எதிரே வந்த ஒரு லாரி மீது மோதியதில் 36 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ போலீஸ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாதைகளை பிரிக்கும் தடையை உடைத்து எதிரெதிர் திசையில் சென்ற பஸ் மற்றும் லாரி மோதியதாக ஜியாங்சு மாகாணத்தின் யிக்ஸிங் நகரத்தைச் சேர்ந்த போலீஸார் தெரிவித்தனர்.

ஆரம்ப விசாரணையில் டயர் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இன்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி மேலும் 36 பேர் காயமடைந்துள்ளனர், 9 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: