சுமத்ரான் புலியின் தாக்குதலால் விவசாயி பலியானார்.

சுமத்ரான் புலியின் தாக்குதலால் விவசாயி பலியானார்.

சுமத்ரா (நவம்-19): சுமத்ரான் புலி இந்தோனேசிய விவசாயி ஒருவரைக் கொன்றுள்ளது.  உள்நாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவருக்குப் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சுமத்ராவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை 57 வயதான விவசாயி ஒருவர் சுமத்ரா தீவிலுள்ள தமது காபி தோட்டத்தில் வேலையில் இருக்கும் இந்த பயங்கர தாக்குதல் நடந்துள்ளது.  அவர் புலியுடன் போராடியும் புலி அவரைக் கொன்று விட்டதென்று தெற்கு சுமத்ரா பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜென்மன் ஹசிபுவான் தெரிவித்துள்ளார்.  அந்த விவசாயி தனது தோட்டத்தில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாகத் திங்களன்று செய்தி நிறுவனங்களிடம் கூறினார்.

தெற்கு சுமத்ராவின் மவுண்ட் டெம்போ பிராந்தியத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுக் கொண்டிருந்த இந்தோனேசியச் சுற்றுலாப் பயணிகளின் குழுவை அதே புலி தாக்கியுள்ளது. கூடாரத்திற்குள் புலி நுழைந்து தாக்கியதில் சுற்றுலாப் பயணிகளில் ஒருவருக்கு முதுகில் நல்ல காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஹசிபுவான் கூறினார்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருக்கும் இந்த விலங்குகளால் இந்த ஆண்டு ஐந்து தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. இதில் இரண்டு அபாயகரமானது என்று ஹசிபுவான் கூறினார்.

பரந்த தென்கிழக்கு ஆசியத் தீவுகளில் மனித-விலங்கு மோதல்கள் பொதுவானவை. குறிப்பாக பாமாயில் தோட்டங்களுக்கு மலைக்காடுகளை அகற்றுவது விலங்குகளின் வாழ்விடங்களை அழித்து வருவதால் மிருகங்கள் மக்களிருக்கும் பகுதிகளுக்கு வர வழிவகுக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், சுமத்ராவின் ரியாவ் மாகாணத்தில் ஒரு நபர் புலியால் கொல்லப்பட்டார். பல மாதங்களுக்கு முன்னர் ஒரு புலி அப்பகுதியில் ஒரு தோட்டத் தொழிலாளியையும் கொன்றது.

சுமத்ரான் புலிகள் மிகவும் ஆபத்தானவை என்று இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த காடுகளில் சுமார் 400 முதல் 500 புலிகள் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: