ஜனவரி 1-ம் தேதி வரை டோல்கேட் கட்டணம் இல்லை.

ஜனவரி 1-ம் தேதி வரை டோல்கேட் கட்டணம் இல்லை.

அபுதாபி: நாளை (அக்டோபர் 15 செவ்வாய்க்கிழமை) முதல் அபுதாபியில் டோல்கேட் கட்டணம் அமல்படுத்தப்படுவதாக இருந்தது. தற்போது 2020 ஜனவரி 1 ஆம் தேதி வரை டோல்கேட்டில் கடந்து செல்லும் வாகனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அபுதாபி போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும், சில கட்டண விலக்குகளும், மாதாந்திர கட்டண முறைகளையும் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ள அறிவித்திருந்த நிலையில் அதில் கணக்கை உருவாக்குவதில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அபுதாபி டோல்கேட்ட கட்டணத்திற்காக பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு தானியங்கி கணக்குகளின் விவரங்களுடன் எஸ்எம்எஸ் வரவில்லை. முசாபா சாலையில் உள்ள நான்கு டோல்கேட்டில் ஒன்று இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது.  மேற்கண்ட தொழில்நுட்ப பிரச்சனைகளை தொடர்ந்து  அபுதாபி அரசு இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமீரக செய்திகள் தெரிவிக்கின்றன.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: