துபாயில் மழைநீரில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர்

துபாயில் மழைநீரில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர்.

துபாய் (ஜன-13): அமீரகத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் இரு வேறு இடங்களில் சிக்கித் தவித்த ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவரை துபாய் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

பெஸ்டிவல் சிட்டி அருகே சுரங்கப்பாதையில் தமது காரில் சிக்கிக்கொண்ட பெண் மீட்கப்பட்டார். இது சம்பந்தமாக கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் போலீசாருக்கு தகவல் வந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். கார் கிட்டத்தட்ட தண்ணீரில் மூழ்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். காரின் கதவு திறக்க முடியாத வகையில் இருந்ததால் ஜன்னல் வழியாக அந்தப் பெண்ணை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், துபாய் இன்டர்நேஷனல் சிட்டியில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் தனது வாகனம் சிக்கிக்கொண்டவர்ஒருவர் மீட்கப்பட்டார். அந்த நபரையும்  ஜன்னல் வழியாக மீட்கப்பட்டதாக துபாய் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: