தோஹாவில் மஹாத்மா காந்தி தபால்தலை வெளியீடு. 

தோஹாவில் மஹாத்மா காந்தி தபால்தலை வெளியீடு.

தோஹா (கத்தார்) : இந்தியாவின் தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த தினத்தை உலகில் வாழும் இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள். மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் மஹாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கத்தார் போஸ்ட் சார்பில் காந்தியடிகளின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது.

மஹாத்மா காந்தி அவர்களின் உருவம் பொறித்த தபால் தலையை கத்தார் போஸ்ட் நிறுவன அதிகாரி வெளியிட இந்திய தூதர் பி. குமரன் பெற்றுக் கொண்டார். இது இந்தியாவுக்கும், மஹாத்மா காந்தியடிகளுக்கும் பெருமையாக கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: