தோஹா மெட்ரோ ரெட் லைன் தெற்கு தற்போது  வார இறுதிநாட்களிலும் இயக்கப்பட உள்ளது.

தோஹா மெட்ரோ ரெட் லைன் தெற்கு தற்போது  வார இறுதிநாட்களிலும் இயக்கப்பட உள்ளது.

தோஹா மெட்ரோ ரெட் லைன் தற்போது வார இறுதிநாட்களிலும் திறக்கப்பட உள்ளதாக கத்தார் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் (Ministry of Transport and Communications (MoTC)) அறிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை செப்டம்பர் 27 முதல் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை மட்டும் பிற்பகல் 2 மணி முதல் (சனிக்கிழமை) அதிகாலை 3 மணி வரை இயக்கப்படும். இந்தச்சமயங்களில் பொதுமக்கள் மெட்ரோ சேவையைப் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளில் மெட்ரோவின் வழக்கமான சேவை நேரமானது பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இருக்கும். சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, மெட்ரோவின் இயக்க நேரம் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இருக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் மெட்ரோலிங்க் மற்றும் மெட்ரோஎக்ஸ்பிரஸ் பீடர் சேவைகள் மூலம் ஸ்டேஷன்களிலிருந்த செல்வதற்காக வாகனங்கள் இயக்கப்படும். ரெட்லைன் பகுதியிலிருக்கும 18 நிலையங்களில் தற்போது ஆரம்பமாக 13 ரெட் லைன் நிலையங்கள் இயக்கத்தில் இருக்கும் அல் கசார், DECC, QIC West Bay, கார்னிச், அல்பித்தா(இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன்), மெஸ்ரிப் (இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன்), அல் தோஹா அல் ஜதீதா, உம் கவாலினா, அல் மதார் அல் கதீம், ஒக்பா இப்னு நபீ, ப்ரீ ஜோன், ராஸ் பு போன்டாஸ் மற்றும் அல் வக்ரா ஆகிய நிலையங்கள் இயக்கத்தில் இருக்கும்.

தோஹா மெட்ரோவின் ரெட் லைன் தெற்கு செயல்பாடுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 86,487 பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தாரில் பலரும் மெட்ரோவில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: