நாசா விண்வெளி மையம் செல்லும் மதுரை மாணவி

நாசா விண்வெளி மையம் செல்லும் மதுரை மாணவி

நாசா விண்வெளி மையத்திற்கு செல்லும் 15 வயது மதுரை மாணவி தான்யா தஷ்னம்.

மதுரையை அடுத்த கள்ளந்திரியைச் சேர்ந்தவர் மாணவி தான்யா தஷ்னம் இவருடைய தந்தையார் ஜாபர் உசேன். ஜாபர் உசேன் அதேப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.  மாணவி தான்யா தஷ்னம் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் சிக்கந்தர் ஜாபரும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் தான்யா தஷ்னம் www.go4guru.com என்ற வலைதளம் மூலம் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மாணவி தான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேர் வெற்றி பெற்றனர். ஆந்திராவைச் சேர்ந்த மாணவி சாய்புஜிதா, மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் அலிபக் ஆகியோரும் விண்வெளி மையமான நாசா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் தான்யா தஷ்னம் உள்ளிட்ட 3 பேரும் அமெரிக்கா சென்று விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் ஒருவாரம் தங்கி இருப்பார்கள். அங்குள்ள ஆய்வகத்தை சுற்றிப்பார்ப்பார்கள். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாசா ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் டான்தாமஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: