பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு பேருந்தை நிறுத்திய மாணவர்.

பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு பேருந்தை நிறுத்திய மாணவர்.

தைமா: பள்ளி வாகன ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அந்த நேரத்தில் பள்ளி மாணவர் ஒருவர் சமயோசிதமாகப் பேருந்தின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி வாகனத்தை நிறுத்தியுள்ளார். அந்த மாணவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சவூதி அரேபியாவில் உள்ள தைய்மா-ல் நேற்று (திங்கள்கிழமை) பள்ளி முடிந்ததும் வாகனத்தில் மாணவர்கள் ஏறிச் சென்றார்கள். அப்போத ஒரு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நஹர் அல் அன்சி என்ற மாணவர் பேருந்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்தினார். இதனால் பெருத்த உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பேருந்தின் ஒரு பக்கத்தில் லேசாக நசுங்கியுள்ளது. மற்றபடி எந்த பெரிய சேதாரமும் இல்லை மாணவனின் சமயோசித செயல்பாட்டால் மற்ற அனைத்து மாணவர்களையும் காப்பாற்றியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

துணிச்சலாகப் பேருந்தை நிறுத்திய மாணவரை தைய்மாவின் கல்வி இயக்குநர் பாராட்டினார்.

மாரடைப்பில் இறந்த ஓட்டுநர் மோத்தாப் அல் அன்சியின் குடும்பத்திற்கு இயக்குநர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: