வீடியோ: பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 19 பேர் இறந்தனர், 300 பேர் காயம்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 19 பேர் இறந்தனர், 300 பேர் காயம்.

செவ்வாயன்று 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடக்கு பாகிஸ்தானை உலுக்கியது. இதில் 19 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு அருகிலுள்ள பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள மீர்பூர் என்ற நகரத்தில் நிலநடுக்கத்தில் பெருவெடிப்பு உண்டாகியுள்ளதை ஊடக புகைப்படங்களும் வீடியோக்களும் காட்டுகிறது.

மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாக மாவட்ட ஆணையர் முகமது தயாப் தெரிவித்தார். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் இர்பான் சலீம் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தனக்கு தகவல்கள் வருவதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர், விமான மற்றும் மருத்துவ உதவி குழுக்களைக் கொண்ட இராணுவத் துருப்புக்கள் அனுப்பப்படுவதாக தமது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“எங்கள் முழு கவனம் இப்போது மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்துவதாகும்” என்று பாகிஸ்தானின் ஆசாத் காஷ்மீர் பிராந்தியத்தின் பிரதமர் ராஜா பாரூக் ஹைதர் ஜிஎன்என் டிவியிடம் தெரிவித்தார். “அங்கே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்துவருகிறோம்” என்றார் அவர்.

இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் ஜீலம் நகருக்கு வடக்கே 14 மைல் (23 கி.மீ) தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (United States Geological Survey (USGS)) தெரிவித்துள்ளது.

ஜீலம் மற்றும் மீர்பூருக்கு இடையிலான பகுதியில் அதிக பாதிப்பு உண்டாகியுள்ளதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அப்சல் தெரிவித்தார்.

ஜீலம் இஸ்லாமாபாத்திலிருந்து தென்கிழக்கில் சுமார் 120 கி.மீ தொலைவில் வடகிழக்கு பாகிஸ்தானில் அமைந்துள்ளது.

காஷ்மீரில் கடைசியாக ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் 2005 ல் நிகழ்ந்தது, இதில் 80,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த பூகம்பத்தில் சேதமடைந்த பகுதியை பாகிஸ்தானின் செய்தி ஊடகம் தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.

 

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: