மொபைலில் பேசிக் கொண்டே பாம்பின் மீது உட்கார்ந்த பெண் பலி.

மொபைலில் பேசிக் கொண்டே பாம்புகளின் மீது அமர்ந்த பெண் பலி.

வீட்டில் தொலைப்பேசியில் பேசிக் கொண்டே ஒரு ஜோடி பாம்புகளின் மீது தெரியாமல் அமர்ந்ததில் பாம்பு கடித்து பெண் இறந்தார். இந்த சம்பவம் கோரக்பூரில் உள்ள ரியான்வ் கிராமத்தில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.

தாய்லாந்தில் பணிபுரியும் ஜெய் சிங் யாதவின் மனைவி கீதா என்பவர் தனது கணவருடன் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு ஜோடி பாம்புகள் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த பாம்புகள் அங்கிருந்த படுக்கையில் விளையாடிக் கொண்டிருந்தன. படுக்கையின் துணியும் நல்ல வண்ணத்திலிருந்துள்ளது இதனால் அதில் பாம்புகள் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவில்லை.

கீதா தொலைப்பேசியில் பேசிக் கொண்டே அறைக்குள் சென்று பாம்புகளைப் பார்க்காமல், அவள் கட்டிலில் அமர்ந்தார். பாம்புகள் அவளைக் கடித்துள்ளன சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளார். குடும்பத்தில் உள்ளவர்கள் கீதாவை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சையின் போது இறந்தார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கமுள்ளவர்கள் கீதாவின் அறைக்குள் சென்று பார்த்த போது பாம்புகள் படுக்கையில் விளையாடிக் கொண்டிருந்தன. அதைப்பார்த்தவர்கள் கோபமடைந்து பாம்புகளைக் கொன்றுள்ளார்கள்.

பாம்புகள் இனச்சேர்க்கையின் போது அதன் மீது அமர்ந்தபோது அவைகள் கடித்துள்ளதாகக் கால்நடை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: