வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படும்.

வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படும்.

குவைத் – ஜன-07: கடந்த டிசம்பர் 29, 2019 அன்று பிலிப்பைன் பெண்ணின் மரணம் தொடர்பான முதல் பதிலில் வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகளைப் குவைத் அரசு சிறந்த முறையில் பாதுகாக்கும். இதற்காக அரசு சரியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குவைத்தின் நிதி அமைச்சரும், பொருளாதார விவகாரங்களுக்கான மாநில அமைச்சருமான மரியம் அல்-அகீல் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை அறிக்கை ஒன்றில், நாட்டில் எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் உரிமைகளையும் மீறுவதற்கு குவைத் அரசு அனுமதிக்காது என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த நாட்டின் குடிமக்களுக்கு ஒரு சட்டம் வெளிநாட்டினருக்கு ஒரு சட்டம் என்று இல்லை. அனைத்து நாட்டினரும் பணியாளர்களுக்கும் ஒரே சட்டம்தான் என்று தெரிவித்தார். குவைத் நீதித்துறை மீதான தனது நம்பிக்கையை அமைச்சர் உறுதிப்படுத்தினார். பணி பாதுகாப்பு காரணமாக குவைத் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை அரவணைக்கிறது என்றும் கூறினார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: