வீட்டு வரி உயர்வு ரத்து; அமைச்சர் வேலுமணி அறிவிப்பு; குவைத் தமிழரின் இடைவிடாத முயற்சி வெற்றி

வீட்டு வரி உயர்வு ரத்து; அமைச்சர் வேலுமணி அறிவிப்பு; குவைத் தமிழரின் இடைவிடாத முயற்சி வெற்றி

தமிழ்நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை 100% வரை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50%, வாடகைக் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100%, குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தமிழகம் முழுவதும் அனைத்து பேரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த வரி உயர்வால், சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். வாடகை பல மடங்கு உயர்த்தப்படும் அபாயம் ஏற்படும். இதனால், வீடில்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்போரின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகும். இந்த வரி உயர்வு ஏற்கெனவே விலைவாசி உயர்வாலும், வேலையின்மையாலும் அவதிப்படும் மக்களின் தலையில் விழும் பேரிடியாகும். வாடகைதாரர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தியது மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது.

தமிழக அரசின் இந்த அநியாய வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை வலியுறுத்தி குவைத் வாழ் தமிழரும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வேண்டுகோள் விடுத்தார். தாயகம் வந்து பல்வேறு நடவடிக்கைகளையும் இதற்காக மேற்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று மாண்புமிகு அமைச்சர் வேலுமணி அவர்கள் வரி உயர்வு ரத்து குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பழைய வரியே பெறப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் இடைவிடாத கடும் உழைப்பு செய்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்ட பரங்கிப்பேட்டை கலீல் பாகவி அவர்களை பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும், பிற அமைப்புக்களின் நண்பர்களும் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: