ஸ்மார்ட் கார்டு இல்லாமல் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல முடியாது.

ஸ்மார்ட் கார்டு இல்லாமல் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல முடியாது.

துபாயில் விளையாட்டு மைதானங்களுக்குள் செல்ல இ-கேட் முறையை அறிமுகப்படுத்தப்படுகிறது. மைதானங்களுக்குள் செல்வதற்காக இலவசமாக ஸ்மார்ட் கார்டுகள் துபாய் நகராட்சியால் வழங்கப்படுகிறது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துபாயில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் இலவச ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்படும், 33 மைதானங்களில் 23 குழந்தைகள் விளையாட்டு மைதானங்களாகும். கால்பந்து மற்றும் கூடைப்பந்தாட்டத்திற்கான 10 விளையாட்டு மைதானங்களும், மற்றும் எல்லா வயதினருக்கும் ஏற்ற நவீன வகை விளையாட்டுகளும் இதில் அடங்கும்.

இந்த திட்டத்தைத் துபாயின் மகுட இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அறிவுறுத்தலின்படி அமல்படுத்தப்படுகிறது. நாட்டின் குடிமக்களுக்கு நல்ல வாழ்க்கை மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து சேவைகளையும் வழங்க வேண்டும். இந்த நாடு ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிலையான நகரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

Customers and Partners Relations துறையின் இயக்குநர் மனால் ஒபைத் பின் யாரூஃப் அவர்கள் கூறியதாவது: அமீரகத்திலுள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நல்ல வாழ்க்கை வசதியை வழங்கவும், துபாய் விஷன் 2021 ற்குள் விரும்பிய இலக்குகளை அடைய பல்வேறு வழிகளில் மகிழ்விக்கவும் நகராட்சி ஆர்வமாக உள்ளது. துபாயில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பொழுதுபோக்கிற்காகவும் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் வசதிகளை மேம்படுத்தத் துபாய் நகராட்சி அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விளையாட்டு பகுதிகளில் மின்-வாயில்கள் (இ-கேட்) அமைப்பதன் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்பதாகக் கூறினார்.

முதல் கட்டமாக 33 விளையாட்டு பகுதிகளில் ஆறு மைதானங்களுக்கு தற்போது ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்படும் என்று யாரூஃப் கூறினார். “ஒவ்வொரு குடும்பமும் விளையாட்டு பகுதிகளுக்குள் நுழையத் துபாய் நகராட்சியிலிருந்து மூன்று பிரத்தியேக இலவச அட்டைகளை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும். அட்டையைப் பயன்படுத்தும் போது சுமார் ​​9 விநாடிகளுக்குக் கேட் திறந்திருக்கும். இதனால் ஒரே அட்டையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் நுழைய முடியும். இது விளையாட்டுப் பகுதிகளின் பயன்பாட்டிற்காகவும், அந்நியர்களின் நுழைவை தவிர்க்கவும் உதவும். இதனால் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, விளையாட்டுப் பகுதிகளிலுள்ள பொருட்கள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் இது உதவும்” என்று யாரூஃப் கூறினார்.

குடியிருப்பு பகுதிகளிலுள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் வெளியாட்கள் நுழைந்து பயன்படுத்துவதாகவும், இதனால் குழந்தைகள் விளையாடும் பகுதிகள் பொருட்கள், கால்பந்து மைதானம் மற்றும் கைப்பந்து மைதானம் உள்ளிட்ட நகராட்சியின் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக நகராட்சிக்குப் பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: