செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 1 வரை 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: ஓமான் ஏர்

செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 1 வரை 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: ஓமான் ஏர்

இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட விமானங்களை ஒமான் ஏர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஒமான் ஏர் ரத்து செய்துள்ள விமான நிலையங்கள் வருமாறு ஒமானில் சலாலா, சவுதி அரேபியாவின் ரியாத், தம்மாம், ஜித்தா, மதீனா, இந்தியாவில் ஹைதராபாத், ஜெய்ப்பூர், மற்றும் தோஹா, அம்மான், தெஹ்ரான், ஏதென்ஸ், கராச்சி, கொழும்பு, காத்மாண்டு ஆகியவைகளுக்கான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சிவில் ஏவியேஷனின் உத்தரவின் பேரில் போயிங் 737 மேக்ஸி ரக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களின் வழித்தடத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மாற்று விமானங்களில் பயணிக்க முன்பதிவுகள் செய்யப்படும். பயணிகளின் முன்பதிவு விபரங்களை https://www.omanair.com/ என்ற இணையதளத்தில் சென்று சரிபார்க்கலாம். அல்லது +96824531111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஓமான் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் 10-ம் தேதி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் போயிங் 737 மேக்ஸ் 8 ஜெட் விபத்தானதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 12-ம் தேதி முதல் இந்த வகை விமானங்களின் சேவைகள் அனைத்தையும் நிறுத்திட பிஏசிஏ (Public Authority for Civil Aviation’s (PACA) பரிந்துரை செய்தது.  இதனைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானங்களின் சேவைகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஒமான் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: