41 முட்டை சாப்பிட்டதால் உயிரிழப்பு: பந்தயத்தால் நடந்த அசம்பாவிதம்

41 முட்டை சாப்பிட்டதால் உயிரிழப்பு: பந்தயத்தால் நடந்த அசம்பாவிதம்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஜான்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2,000 ரூபாய் பணத்திற்கு போட்டியிட்டு உயிர் போனதென்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பெயர் சுபாஷ் யாதவ் இவருக்கு வயது 42. யாதவ் தனது நண்பருடன் மார்க்கெட் பகுதியில் முட்டை சாப்பிட வந்ததாகவும், அப்போது நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டு இந்த முட்டை சாப்பிடும் போட்டி நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதாவது 50 முட்டைகளை சாப்பிட்டால் இரண்டாயிரம் ரூபாய் தருவதாக நண்பர் கூறியதை தொடர்ந்து சுபாஷ் யாதவ் முட்டை சாப்பிட ஒத்துக் கொண்டுள்ளார். பிறகு முட்டையையும் சாப்பிட ஆரம்பித்துள்ளார். 41 முட்டை சாப்பிட்டு விட்டு 42 வது முட்டை சாப்பிட ஆரம்பித்த போது மயக்க மடைந்து சரிந்து விழுந்தள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கல்லூரிக்கு  அனுப்பப்பட்டார். அங்கு அவர் சில மணி நேரம் கழித்து இறந்துவிட்டார்.

அதிகப்படியான உணவு காரணமாக சுபாஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: