60 ஆண்டுகளாக குவைத்தில் இருக்கும் 88 வயது பெண் ‘இக்காமா’ வேண்டி கோரிக்கை.

60 ஆண்டுகளாக குவைத்தில் இருக்கும் 88 வயது பெண் ‘இக்காமா’ வேண்டி கோரிக்கை.

60 ஆண்டுகளாக குவைத் நாட்டில் இருக்கும் 88 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவர் தன்னுடைய இக்காமா என்னும் குவைத் அடையாள அட்டை புதுப்பிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். தமது கோரிக்கையை குவைத் நாட்டின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் கலீத் அல்-ஜர்ரா அவர்களிடம் தனது வசிப்பிட விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குவைத் நாட்டின் தினசரி அல்-சாயாஸா தெரிவித்துள்ளது.

வயதான அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டார் மற்றும் அவரது வசிப்பிட அனுமதி அவரது சகோதரருக்கு மாற்றப்பட்டது. தற்போது அப்பெண்ணின் சகோதரர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதாகவும், இச்சமயத்தில் அவரது வசிப்பிட அனுமதி (residency permit) காலாவதியானது என்றும் அவர் கூறினார். அவருக்கு வேலைக்குச் செல்லாத இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மகள்களில் ஒருவரின் கணவர் பொறியியலாளராக வேலை செய்கின்றார். அவரது ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் தனது வசிப்பிட அனுமதி மாற்றுவதற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அந்த வயதான பெண்மணி துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் கலீத் அல்-ஜர்ரா அவர்களிடம் தனது மகள்களுடன் தான் இருக்க விரும்புவதால் தனது மருமகனின் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருப்பதற்கு ஒப்புதல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தனது மகள்களைத் தவிர வேறு எவரும் தன்னைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: