ஏழாயிரத்திற்கும் அதிகமான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

ஏழாயிரத்திற்கும் அதிகமான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

மனாமா: பஹ்ரைன் சாலை விதிமுறைகள் மீறிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கான முயற்சியை நகராட்சி எடுத்துச் செயல்பட்டது இதில் கிட்டத்தட்ட 7,900 சாலை ஆக்கிரமிப்பு மீறல்களை நீக்கியுள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் அகற்றப்பட்டதாகும். கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 7,900 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதென்று நகராட்சி தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் அறிவித்துள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்கும், சாலைகளின் அழகைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நகராட்சி கூறியுள்ளது.

அகற்றப்பட்ட மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் விளம்பரப் பலகைகள், கைவிடப்பட்ட வாகனங்கள், முறையாக வைக்கப்படாத கட்டுமான பொருட்கள், பராமரிப்பில் இல்லாத வீடுகள், இறந்த விலங்குகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட வாகன சன்ஷேட் மற்றும் இரும்பு கம்பங்கள் ஆகியவை அடங்கும் என்று நகராட்சி மேலும் கூறியுள்ளது. இது போன்ற சாலை விதி மீறல்களைக் கண்காணிக்கவும் அகற்றவும் அவ்வப்போது பிரச்சாரங்களை நடத்தி வருவதாக நகராட்சி அறிவித்துள்ளது.

முறையற்ற விளம்பர பதாகைகள் அல்லது இரும்புக் கம்பங்கள் மற்றும் கட்டுமான கழிவுகளைச் சாலைகளில் வைப்பது சாலை பயனர்களுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்குகின்றது என்று நகராட்சி குறிப்பிட்டது. ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறடிக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்த பிரச்சாரங்களின் தொடர்ச்சியினால் பொது தூய்மைக்கு முரணான நிகழ்வுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளை நகராட்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: